இந்தியாவை மிரட்டி பார்க்கும் குரங்கம்மை... மத்திய அரசு அதிரடி முடிவு

x

இந்தியாவில் குரங்கு அம்மை பரவலை தொடர்ந்து, நோய் கண்டறிதல் வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் நாட்டில் நோய்த்தொற்றுக்கான தடுப்பூசிகளை ஆராய்வதற்காக அரசாங்கத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக ஒரு குழுவை மத்திய அரசு உருவாக்கி உள்ளதாக தகவல்.

அமைச்சரவை செயலாளர், மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், கூடுதல் செயலாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்), டாக்டர் வி.கே.பால் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம், பார்மா மற்றும் பயோடெக் ஆகியவற்றின் செயலர் உள்ளிட்ட உறுப்பினர்கள் குழுவிற்கு தலைமை தாங்குவார்கள்.


Next Story

மேலும் செய்திகள்