மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்... பாடல் பாடி உற்சாகப்படுத்திய செவிலியர்கள்...

x

சென்னை கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த மகேந்திரன் - தீபா தம்பதிக்கு இன்று திருமணம் கோலாகலமாக நடைபெற்றது... 42 வயது மகேந்திரனும் 36 வயது தீபாவும் சிகிச்சை பெறும் போது இருவருக்கும் இடையே மலர்ந்த காதல் இன்று திருமணத்தில் கைகூடியது... கீழ்பாக்கம் மனநல காப்பகத்தின் 225 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக அங்கேயே சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் திருமணம் செய்து கொள்வது இதுவே முதன்முறை... அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்