சிறைக்காவலரை சரமாரியாக தாக்கிய சம்பவம்...சிறை வார்டன்கள் பணியிடை நீக்கம் | Uttar Pradesh

x

உத்தரபிரதேசத்தில் சிறைக்காவலரை சரமாரியாக தாக்கிய சிறைத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ரேபரேலி மாவட்டத்தில் இருக்கும் சிறைச்சாலையில் வேலைப்பார்த்த காவலர் சிறைவார்டன்களின் பேச்சை கேட்காமல் நேர்மையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், கைதிகளுக்கு கொடுக்கப்படும் உணவில் சமரசம் செய்து கொள்ளாததால், ஆத்திரமடைந்த சிறை வார்டன்கள், அந்த காவலரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த நிலையில், சிறைக்காவலரை தாக்கும் வீடியோ வெளியானதும், அதில் தொடர்புடைய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை இயக்குநர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்