"உள்துறை அமைச்சர் உதவியை நாடவே ஆளுநரை சந்தித்தார் ஈபிஎஸ்" - அமைச்சர் பொன்முடி கருத்து

x

அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனையில் உள்துறை அமைச்சர் சரி செய்ய முடியுமா என கேட்கவே எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் தமிழக ஆளுநரை சந்தித்ததாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்... விழுப்புரம் மாவட்டம் வேம்பியில் விவசாயிகளுக்கு பயிற்சி, அரசு நலத்திட்டம் வழங்கும் விழா மற்றும் புதிய மின் மாற்றி துவக்க விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். மேலும், அறிவியல் ரீதியாக விவசாயம் செய்ய வேண்டும் என்பதற்காக வேளாண்மை துறையை தனியாக உருவாக்கி முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருவதாக அவர் புகழாரம் சூட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்