இறந்தும் துடிக்கும் தொழிலாளி இதயம்.. 7 பேர் உடலில் வாழும் மாமனிதன் - கலங்கிய சென்னை ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்

x

விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஒப்பந்த தொழிலாளி ஒருவர், தன் உடல் உறுப்புகளை தானமாக கொடுத்து, 7 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார்... நெகிழ்ச்சி செய்தியின் பின்னணி பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு...

இந்தியாவில் உறுப்பு தானம் பெற,5 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஆனால் 1 லட்சம் பேரில், 8 பேர் மட்டுமே உறுப்பு தானம் செய்ய முன் வருகின்றனர்.

உடல் உறுப்பு தானம் கிடைக்காமல், இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. நல்வாய்ப்பாக இந்தியாவில் இருக்க கூடிய மாநிலங்களில், தமிழ்நாடு உறுப்பு தானங்கள் செய்வதில் முன்னணி வகிக்கின்றது...

அந்த வகையில், திருவொற்றியூரை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி செய்த உறுப்பு தானம் 7 பேருக்கு மறு வாழ்வு அளித்துள்ளது.

சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர்கள் ரமேஷ் இவர் மணலியில் உள்ள, பெட்ரோலியம் லிமிடெட் கம்பெனியில், ஒப்பந்த தொழிலாளியாக பணி செய்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சாத்தான்காடு காவல்நிலையம் எதிரில் வந்து கொண்டிருந்த ரமேஷின் மீது, இரு சக்கர வாகனம் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மூளை சாவு அடைந்தார் ரமேஷ். இந்த இழப்பை தாங்கிக் கொள்ளமுடியாத அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியது.

மூளைச்சாவு அடைந்த நிலையில் இனி ரமஷை மீட்பது கடினம் என்பதை புரிந்து கொண்டு அவரது மனைவி சித்ரா, கணவரின் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க முன்வந்தார்.

அவர்களின் சம்மதத்துடன்,கல்லீரல்,இரண்டு சிறுநீரகம், இதய வாழ்வு, தோல் மற்றும் இரண்டு கண்கள் என மொத்தம் 7 உறுப்புகள் கொடையாக பெறபட்டது.

இதில் 6 உறுப்புகள் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கும், ஒரு சிறுநீரகம் மட்டும் தனியார் மருத்துவ மனை நோயாளிக்கும், அரசு விதிமுறைப்படி வழங்கப்பட்டது.

நடைமுறைகள் எல்லாம் முடிந்த பின், உறுப்பு கொடையளித்த ரமேஷ் உடலுக்கு ஸ்டான்லி மருத்துவர்கள் இதய அஞ்சலி செலுத்தி உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

மூளைச்சாவு அடைந்த ரமேஷ், உயிருக்கு போராடிய 7 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார். உடல் உறுப்பு தானத்தை பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்துவதன் மூலம், இன்னும் பல உயிர்களை காக்க முடியும் என்று கூறும் மருத்துவர்கள்

மாதம் சார்ந்த நம்பிக்கைகளும்,சில பழமைவாத பழக்கமும் உடல் உறுப்பு தானத்திற்கு பெருந் தடையாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்