லேசான நெஞ்சு வலியுடன் வந்த பெண்... வீட்டுக்கு பிணமாக அனுப்பிய கொடூர சாலை - கதறி துடித்த மகன்

x

கோவையில் குண்டும், குழியுமான சாலையில் பள்ளத்தில் சிக்கி கொண்ட வேனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அப்போது, நெஞ்சு வலியால் துடித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

கோவை குனியாமத்தூர் சக்திநகரை சேர்ந்தவர் பாப்பாத்தி என்ற நாகம்மாள். 70 வயதான இவர் மின்வாரியத்தில் ஊழியராக பணி புரிந்து ஓய்வு பெற்ற நிலையில், தனது கணவர் உயிரிழந்ததால், மகன் ராஜாபாண்டியுடனே வசித்து வந்திருக்கிறார்...

வழக்கம்போல் வீட்டில் பேசி, சிரித்து கொண்டிருந்த நாகம்மாள், திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே சரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மகன், உடனே தாயை காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது விதி அவரை படுத்திய பாடு சொல்லி மாளாது...

கோவை சக்தி நகரில் சாலைகள் குண்டும், குழியுமாக சீரற்று இருப்பதாகவும், அதனை சரிசெய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில், கோவையில் பெய்த பலத்த மழையின் காரணமாக சாலையின் மேடு, பள்ளங்களை அதில் தேங்கிய மழை நீர் மறைத்துள்ளது...

இந்நிலையில், தாயை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்த ராஜாபாண்டியனின் கார் முன்பு, முன்னே சரக்கு வேன் ஒன்று சென்றுள்ளது...

சேறும், சகதியுமாக காணப்பட்ட சாலையில், பள்ளங்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் தட்டு தடுமாறி இயங்கிய வாகனம், பள்ளம் ஒன்றில் சிக்கியுள்ளது...

குறுகலான சாலையில் முன்னே சென்ற வாகனம் பள்ளத்தில் சிக்கி சாலையை மறித்ததை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜாபாண்டியன், முன்னோக்கி நகர முடியாமல், காரை பின்னோக்கி நகர முற்பட்ட போது, பின்னால் தொடர்ச்சியாக வாகனங்கள் நின்று சாலையே ஸ்தம்பித்துள்ளது...

இந்நிலையில், காருக்குள் துடித்துக் கொண்டிருந்த தாயை பார்த்து செய்வதறியாமல் மகன் தவித்த நிலையில், ஒரு வழியாக சிறுது தாமதத்திற்கு பிறது பொக்லைன் இயந்திரம் வரவழக்கைப்பட்டு பள்ளத்தில் சிக்கிய வேன் மீட்கப்பட்டுள்ளது...

அதன்பிறகு தாயை வேகம்வேகமாக மருத்துவமனை அழைத்து சென்ற போது, அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது இளைஞரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது...

மருத்துவமனை வளாகத்திலே கதறி அழுத மகனை கண்டு, அனைவரும் கண் கலங்கிய நிலையில், தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்... குண்டும், குழியுமான சாலையை சீராக்கமால் விட்டதன் அலட்சியம், ஒருவரின் உயிரை பறித்திருப்பதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்