கோயிலுக்கு வந்த சிறுமி...கேலி செய்த இளைஞர்கள் - தட்டிக்கேட்டதால் இரு தரப்பினருக்கு இடையே கடும் மோதல்

x

கோயிலுக்கு வந்த சிறுமி...கேலி செய்த இளைஞர்கள் - தட்டிக்கேட்டதால் இரு தரப்பினருக்கு இடையே கடும் மோதல்


சீர்காழி அருகே, கோயிலுக்கு வந்த சிறுமியை கேலி செய்த விவகாரத்தில், இருதரப்பினர் இடையே நிகழ்ந்த மோதலில், 3 பேர் படுகாயமடைந்தனர். மாதானம் கிராமத்தில் தாயுடன் கோயிலுக்கு வந்த 17 வயது சிறுமியின் மீது, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் தண்ணீர் பீய்ச்சி அடித்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்டபோது, இருதரப்பிர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 கடைகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 6 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்