உயிருக்கு பயந்து ஓடிய பிரபல பாடகி இறுதியில் உயிரையே விட்டார்.. எடுத்தது யார்? - ரத்தத்தை உறையவிடும் பின்னணி

x

ஆப்கானில் தாலிபன்கள் ஆட்சியில் இருந்து தப்பி பாகிஸ்தான் சென்ற பிரபல பாடகி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியதும் அகதிகளாக பலர் வெளியேறினர். உயிருக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறியவர்களில் 38 வயதான பிரபல பாடகி ஹசிபா நூரியும் ஒருவர்.

ஆப்கான் நாட்டுப்புற பாடல்களில் கலக்கும் ஹசிபாவிற்கு ரசிகர் பட்டாளமும் ஏராளம். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தனது குரலில் பல பாடல்களையும் வெளியிட்டு தனியொரு பாடகியாக உருவெடுத்தார்.

2021ம் ஆண்டு தாலிபன்கள் வருகையால் கலைத்துறையில் இருந்த கலைஞர்கள் மற்றும் பெண்கள் அச்சத்தில் இருந்தனர். தாலிபன்களின் விதிமுறைகளால் கலைத்துறை யில் நீடிப்பது கேள்விக்குறியானதால், பலரும் பாகிஸ்தானுக்கு படையெடுத்தனர்.

அவர்களுடன் பாடகி ஹசிபாவும் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தார். ஆப்கான் காபூலில் தனது குடும்பத்தினரை விட்டு விட்டு தாயாருடன் பாகிஸ்தானுக்கு சென்றார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவில் உள்ள குசாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹசிபாவை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

அவரது உயிரிழப்பை அவரது நண்பர் உறுதி செய்த நிலையில், இச்செய்தியை கேட்ட பலரும் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர்.

பாடகியின் மரணம் குறித்து பாகிஸ்தான் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே பொருளாதார சிக்கல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்கான் அகதிகளை சொந்த நாட்டிற்கு திரும்பி செல்ல பாகிஸ்தான் அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் ஆப்கானிஸ்தானில் மோசமான சூழல் நீடித்து வருவதால், சொந்த நாட்டிற்கு செல்ல மக்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி பாகிஸ்தானுக்கு சுமார் 14 லட்சம் பேர் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்