தலைநகரை உலுக்கிய இளம்பெண் மரணம்... யார் இந்த நிதி..? தோண்ட தோண்ட வெளிவரும் 'திடுக்' தகவல்கள்...

x

டெல்லியில் இளம்பெண் அஞ்சலி காருக்கு அடியில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் உடன் பயணித்த தோழி நிதி ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது..

டெல்லி கஞ்சவாலா பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இளம்பெண் அஞ்சலி காருக்கு அடியில் 12 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் தலைநகரை உலுக்கியிருக்கிறது. உயிரிழந்த அஞ்சலியுடன் நிதி என்ற பெண் இருசக்கர வாகனத்தில் சென்றது உறுதியான நிலையில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அஞ்சலி மது குடித்திருந்ததாக நிதி கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே நிதி போதைப் பொருள் வழக்கில் ஆக்ராவில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரம் சம்பவத்தன்று பணம் தொடர்பாக நிதி மற்றும் அஞ்சலிக்கிடையே மோதல் ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்திருக்கிறார் அஞ்சலியின் தாய்.. நிதி குறித்த ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைகள் எழுந்த நிலையில் அவரை கைது செய்து விசாரித்தால் பல உண்மைகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்