"IT ரெய்டு" - தமிழகத்தில் கால் வைத்ததும் முதல்வரின் நெத்தியடி

x

சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் 9 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு சென்னை திரும்பினார். சென்னையில் இருந்து கடந்த 23-ம் தேதி சிங்கப்பூர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்நாட்டு தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோரை சந்தித்து வர்த்தக உறவுகள், முதலீடுகள் குறித்து பேசியதுடன், அடுத்த ஆண்டு ஜனவரியில் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

அங்கிருந்து 25-ஆம் தேதி ஜப்பான் சென்ற முதல்வர், ஜப்பானில் உள்ள தொழில் நிறுவனங்களை நேரில் பார்வையிட்டு, அதன் தலைவர்களையும், அந்நாட்டு அமைச்சர்களையும் சந்தித்துப் பேசினார். அப்போது, ஜப்பான் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிலையில், 9 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் நேற்றிரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் ஸ்டாலின், இந்தப் பயணத்தின்போது, ஜப்பான், சிங்கப்பூர் நிறுவனங்களுடன் ரூ.3,233 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்