நியாபகம் இருக்கிறதா "உயிர்காத்த" எழிலரசியை? - விருது கொடுத்து கௌரவித்த முதல்வர்..!

x

நியாபகம் இருக்கிறதா "உயிர்காத்த" எழிலரசியை? - விருது கொடுத்து கௌரவித்த முதல்வர்..!


குளத்தில் மூழ்கிய 2 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய நாகை மாவட்டம் கீழ் வேளூரைச் சேர்ந்த எழிலரசிக்கு சுதந்திர தினமான இன்று வீர தீர சாகச செயலுக்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதை வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்... அஞ்சுவட்டத்தம்மன் கோயிலுக்கு சொந்தமான குளத்தில் 2 குழந்தைகள் மூழ்கிய நிலையில், நீச்சல் தெரியாத போதும் தைரியமாகக் குதித்து குழந்தைகளைக் கரை சேர்த்தார். தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வீர தீர செயலில் ஈடுபட்டு குழந்தைகள் உயிரைக் காப்பாற்றிய எழிலரசிக்கு இன்று கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்ட நிலையில், குழந்தைகளுக்கு படிப்போடு நீச்சல் பயிற்சியையும் பயிற்றுவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்