ஓடும் போதே திடீரென பற்றியெரிந்த கார்..! அலறி அடித்து தப்பிய இளைஞர்கள்... வெளியான திக் திக் வீடியோ

x

கேரளாவைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கர்நாடகா வந்து விட்டு மீண்டும் கேரளா திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது கர்நாடகாவின் குண்டல்பேட்டை பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது சாலையில் வீசப்பட்டிருந்த பீன் பேக் ஒன்று காரின் சக்கரத்தில் சிக்கியது.

இதனால் எழுந்த தீப்பொறியால், கார் திடீரென தீ பற்றியது. உடனடியாக காருக்குள் இருந்தவர்கள் தங்கள் உடைமைகளை எடுத்து கொண்டு அலறியடித்தபடி ஓடினர்.

தீயணைப்புத்துறையினர் காரில் பற்றிய தீயை அணைப்பதற்குள் முற்றிலும் சேதமடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்