7 மாதங்களாக சிறுமியை சிதைத்த காதலன்... நண்பர்களுடன் சேர்ந்து அரங்கேறிய கொடூரம்..! கேட்போரை அதிர வைக்கும் சம்பவம்

x

கேரளாவில், 17 வயது சிறுமியை 7 மாதங்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்த காதலன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்ததன் சம்பவத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள அடூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுமேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார்.

இதனிடையே, சிறுமியை தனியாக சந்தித்து பேச சுமேஷ் அழைத்துள்ளார். அதனை நம்பி காதலன் சொன்ன இடத்திற்கு சிறுமி சென்றுள்ளார். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்ற சுமேஷ், ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அதன் பிறகு, தனது சித்து விளையாட்டை காட்டத் தொடங்கிய சுமேஷ், சிறுமியை தனது நண்பர்களுக்கும் விருந்தாக்க நினைத்ததுதான் கொடூரத்தின் உச்சமாக இருந்தது.

தனது நண்பர்களான சக்தி, அனூப், அபிஜித் மற்றும் அரவிந்த் ஆகியோருக்கு போன் செய்த சுமேஷ், தான் இருக்கும் இடத்திற்கு அவர்களை வரவழைத்துள்ளார்.

சுமேஷிடம் நெருக்கமாக இருந்த சிறுமிக்கு, 4 இளைஞர்கள் திடீரென வந்து நின்றது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது, சிறுமி இருந்த கோலத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த அந்த கும்பல், அதனை வைத்து மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளது.

இதேபோல, நிர்வாண வீடியோவை காட்டி, 7 மாதங்களாக தொடர்ந்து அந்தக் கும்பல் சிறுமியை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதுதான் கொடூரத்தின் உச்சம்.

தனக்கு நேர்ந்த இன்னல்களை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்த சிறுமிக்கு, பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. பள்ளியில் குழந்தைகள் நல அமைப்பினர் நடத்திய கவுன்சிலிங்கில், தனக்கு நடந்த கொடுமைகளை சிறுமி கூறவே, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து குழந்தைகள் நல அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட காதலன் சுமேஷ், சக்தி, அனூப், அபிஜித் மற்றும் அரவிந்த் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின் 5 பேரும் பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்