நீச்சல் அடித்தவாறு சிலம்பம் சுற்றி அசத்தல்..சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவன்

x

கோவையில் நீச்சல் அடித்தவாறு சிலம்பம் சுற்றி அசத்திய 11 வயது சிறுவன், சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தான ராஜா - ராஜேஸ்வரி தம்பதியினரின் மகன் ராஜமுனீஸ்வர். இவர், சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை பயின்று வந்த நிலையில், நீச்சலிலும் ஆர்வம் உள்ளதை அறிந்த பயிற்சியாளர், அதற்கான பயிற்சியும் தந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் புதுவித சாதனையாக நீச்சல் அடித்தவாறு சிலம்பம் சுழற்றி நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை படைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்