பெண்களை விரட்டி சென்று இடித்து தள்ளி மின்னல் வேகத்தில் பறந்த ஆட்டோ டிரைவர் - சேலத்தில் பரபரப்பு

x

சேலத்தில் ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி பெண்கள் மீது இடித்து விட்டு சென்ற ஆட்டோ ஓட்டுநரால் பரபரப்பு நிலவியது. அங்குள்ள, வின்சென்ட் பிரதான சாலையில் ஆட்டோ ஒன்று தாறுமாறாக சென்றது. இது குறித்து இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளம்பெண்கள், ஆட்டோ ஓட்டுநரை தட்டிக் கேட்ட நிலையில், சாலையின் குறுக்கே ஆட்டோவை நிறுத்தி அந்த பெண்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அவர்களை இடித்து கீழே தள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, ஆட்டோ பதிவெண் அடிப்படையில் சிவா என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்