வேலை இல்லை..திருமணமாகாத கவலை.."மகள் உறங்கியிருப்பாள்..!"ஆனால்... திடீரென கலவரமான அந்த அபார்ட்மெண்ட்

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள ஏகாட்டூரில் பிரமாண்டமாக காட்சி தருகிறது அந்த அடுக்குமாடி குடியிருப்பு...
x

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள ஏகாட்டூரில் பிரமாண்டமாக காட்சி தருகிறது அந்த அடுக்குமாடி குடியிருப்பு...

30 மாடிகளை கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 24 வது தளத்தில் வசித்து வருகிறார் வில்லியம் ஜேம்ஸ். இவரின் மகள் ஜெனிபர். 35 வயதான இவர், மென்பொருள் நிறுவன ஊழியராக இருந்துள்ளார்.

பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஜெனிபர், கொரோனாவின் ஆட்டத்தில் வேலையை இழந்திருக்கிறார்.. பலரின் வேலைக்கு உலைவைத்த கொரோனா, ஜெனிபரையும் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறது...

இதனால் வீட்டில் முடங்கி கிடந்த ஜெனிபர், மீண்டும் வேலைக்காக பல நிறுவனங்களின் படி ஏறி இறங்கியிருக்கிறார். ஆனாலும் அவருக்கு வேலை கிடைத்தபாடில்லை... பல வருடங்களாக ஓடியாடி வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜெனிபருக்கு வேலையில்லாமல் இருந்தது மன உளைச்சலை தந்திருக்கிறது..

அதேநேரம் 35 வயதாகியும் திருமணம் கை கூடி வராத விரக்தியும் மறுபக்கம் ஜெனிபரை வதைத்திருக்கிறது... இதனால் கடும் மன உளைச்சலில் இருந்திருக்கிறார் அவர்...

வீட்டில் இருந்தவர்களிடம் கூட முகம் கொடுத்து பேசாமல் முடங்கி கிடந்த ஜெனிபர், தன் அறையை விட்டு வெளியே வரவில்லையாம்..மகள் உறங்கியிருப்பாள் என நினைத்து வீட்டில் இருந்தவர்கள் தூங்கிய போது திடீரென அதிகாலை நேரம் அந்த அபார்ட்மெண்டே கலவரமானது..

காரணம், 24 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் ஜெனிபர்.. அவரின் இந்த விபரீத முடிவு பலரையும் கலங்க வைத்த நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரின் சடலம் காண்போரை கதிகலங்க வைத்தது...

மன உளைச்சலுக்கு மருந்தே மனம் விட்டு பேசுவதுதான்.. அப்படி தன் மன பாரத்தை ஜெனிபர் யாரிடமேனும் இறக்கி வைத்திருந்தால் இப்படி ஒரு முடிவை நிச்சயம் எடுத்திருக்க மாட்டார்...


Next Story

மேலும் செய்திகள்