தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | Thanthi Short News (03.11.2022)

x

கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு...

இன்றும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் பெய்த மிதமான மழை...

கிண்டி, நங்கநல்லூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் சிரமம்

சென்னை திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதியை சூழ்ந்த மழை நீர்..

மழைநீரில் தெர்மாகோல் மீது ஏறி சவாரி செய்து சிறுவர்கள் குதூகலம்...

தொடர் மழையால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தவிர்க்க செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கன அடி நீர் திறப்பு..

ஏரியின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

புழல் ஏரி 82 சதவீதம் நிரம்பியதால், பாதுகாப்பு கருதி வினாடிக்கு 100 கன அடி நீர் திறப்பு..

வடகரை, சாமியார்மடம், மணலி, கொசப்பூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..


Next Story

மேலும் செய்திகள்