21 நிமிடத்தில் 67 செய்திகள் | தந்தி மாலை செய்திகள்

x
  • வதந்திகளை பரப்பி, சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்க, தகவல் தொழில்நுட்பத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்....
  • ஆன்லைன் ரம்மி மனித உயிர்களை நித்தமும் பலி வாங்கிக் கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தொழில்நுட்பம் உதவியுடன் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்....
  • அதானி குழும முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தி ஆம் ஆத்மி, பிஎஸ்ஆர் கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வாசலில் போராட்டம் நடத்தினர்
  • ஆஸ்கர் விருது பெற்ற Elephant Whisperer ஆவண குறும்படத்திற்கும், நாட்டு நாட்டு பாடலுக்கும் மாநிலங்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
  • இந்தியாவைச் சேர்ந்த திரைப்படங்கள் ஆஸ்கர் வென்றிருப்பது, இந்திய திரைப்பட தொழில்துறையை சர்வதேச மயமாக்கும் என மாநிலங்களவை அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கருத்து தெரிவித்தார்...
  • 2 இந்திய படங்கள் ஆஸ்கர் வென்றதற்கு தாங்கள்தான் காரணம் என்று பாஜக கிரெடிட் எடுத்துக்கொள்ளக் கூடாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியபோது, மாநிலங்களவையில் சிரிப்பலை எழுந்தது...
  • பிரதமர் மோடிதான் படத்தை இயக்கினார் என சொல்லக் கூடாது எனவும் கார்கே கிண்டலாக விமர்சித்தார்.
  • அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  • நீட் தேர்வினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நிகழ்த்தி, தனது இன்னுயிரை இழந்த அனிதா வின் நினைவாக அனிதா நினைவரங்கம் என்று பெயர் சூட்டப்படும் என தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்