ஆட்டோ ஓட்டுநராக வலம் வந்த பயங்கரவாதி - சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ்

ஆட்டோ ஓட்டுநராக வலம் வந்த பயங்கரவாதி - சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ்
x

ஜம்மு காஷ்மீரின் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி ஒருவர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பெங்களூரூ போலீசாரிடம் கூறி இருந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பெங்களூரு போலீசாரும், மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாரும் அந்த நபரை தேடும பணியில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் நடவடிக்கையில் ஆட்டோ ஓட்டுனராக இருந்த ஹூசைனை போலீசார் கைது செய்தனர். பெங்களூரூ ஸ்ரீ ராம புரா பகுதியில் மனைவியுடன் கடந்த 2 ஆண்டுகளாக ஹூசைன் தங்கி இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவரான தாலிப் ஹூசைன், 2016-ம் ஆண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தில் இணைந்து அந்த இயக்கத்துக்கு இளைஞர்களை மூளைச் சலவை செய்து சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர் பெங்களூருவில் ஏதேனும் நாசவேலை செய்ய திட்டமிட்டிருந்தாரா அல்லது நகரில் தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்களை சேர்த்தாரா என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்