மகளிர் டி20 உலகக்கோப்பை...122 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

x

மகளிர் டி20 உலகக்கோப்பை...122 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி


19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது. பெனோனியில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிகள் மோதின. முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. இந்திய வீராங்கனைகள் ஷஃபாலி வர்மா 78 ரன்களும், ஷ்வேதா 74 ரன்களும் சேர்த்தனர். பின்பு விளையாடிய யூ.ஏ.இ. மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, குரூப் டி பிரிவில் 4 புள்ளிகளை பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்