நீச்சல் குளத்தில் பெண்களும் மேலாடையின்றி குளிக்க ஜெர்மனியில் அனுமதி

x
  • ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள பொது நீச்சல் குளங்களில், பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
  • மேலாடையின்றி குளிக்கும் உரிமை ஆண்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது பாரபட்சமானது என்று பெண்மணி ஒருவர், ஜெர்மன் சென்ட் சபையின் குறை தீர்க்கும் பிரிவில் புகார் அளித்தார்.
  • இதனை தொடர்ந்து பெர்லின் நகாரட்சி இதற்கு அனுமதியளித்துள்ளது.
  • சிஜென், காட்டின்ஜென் உள்ளிட்ட பல்வேறு ஜெர்மன் நகரங்களில் இத்தகைய நடைமுறை ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • உலக அளவில் 39 நாடுகளில், கடற்கரைகளில் மேலாடையின்றி பெண்கள் நீராடவும், சூரிய குளியல் எடுக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
  • 38 நாடுகளில் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
  • 29 நாடுகளில் இதைப் பற்றி தெளிவான விதிமுறைகள் எதுவும் இல்லை. அமெரிக்காவில் 32 மாகாணங்களில், மேலாடையின்றி சூரிய குளியல் எடுக்க அனுமதிக்க ப்படுகிறது.
  • ஆஸ்த்ரேலியா, கனடா, நெதர்லாந்து, பிரிட்டன், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் இதற்கு முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • ஜப்பான், ஹங்கேரி உள்ளிட்ட ஒரு சில நாடுகளில், முழு நிர்வாண குளியல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்