புதிய ஊதிய திட்டத்தை கைவிடக் கோரிக்கை-தொடரும் ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

x

புதிய ஊதிய திட்டத்தை கைவிடக் கோரிக்கை-தொடரும் ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்


புதிய ஊதிய திட்டத்தை கைவிட வலியுறுத்தி, சென்னையில் உணவு விநியோகம் செய்யும் சுவிக்கி நிறுவன ஊழியர்கள் நான்காவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஏற்கனவே இருந்த 12 மணி நேர வேலையில் வாரம் 13 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் கிடைத்ததாகவும், தற்போது 16 மணி நேரம் வேலை என்ற புதிய நடைமுறையால், 9 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கிடைப்பதாகவும் வேதனை தெரிவித்தனர். ஏற்கனவே இருந்த தினசரி மற்றும் வார ஊக்கத்தொகை, பழைய ஷிப்ட் முறை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என அவர்கள் எச்சரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்