"சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை ..." "தமிழ் வழக்காடு மொழி..." முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

x

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார். மேலும், உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்