இப்படி ஒரு காவலரா!.. உச்சி வெயிலில் மக்களுக்காக சிறப்பு பணிபுரியும் போக்குவரத்து தலைமை காவலர் சிவபெருமான்

x

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் போக்குவரத்து தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சிவபெருமான். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இருசக்கர வாகனம் இயக்கக் கூடாது, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும், மூன்று நபர்கள் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, பெற்றோர்களை பாதுகாப்பாக காக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான விழிப்புணர்வு பாடல்களை பாடி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் போக்குவரத்து தலைமை காவலர் சிவபெருமான் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே போக்குவரத்து பணியில் ஈடுபட்டுள்ள சிவபெருமான் கிரிவலம் வரும் பக்தர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு வகையான நாட்டுப்புற பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள் மெட்டில் பாடல்களை பாடி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் கடும் வெயிலில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு விழிப்புணர் பாடல்களை பாடி வருவது பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியும் பொதுமக்கள் தலைமை காவலரை பாராட்டியும் வாழ்த்தியும் சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்