கழிப்பறையை சுத்தம் செய்த மாணவர்கள்; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

x

தேனி மாவட்டம் சக்கம்பட்டியில், அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்தது தொடர்பாக, தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

முத்துமாரியம்மன் நகரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்திய நிலையில், தலைமை ஆசிரியர் ஜனகராஜை பணியிட மாற்றம் செய்து, பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் நரேஷ் நடவடிக்கை மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்