ரயிலில் லேப்டாப்பை தவறவிட்ட மாணவி..4 மணிநேரத்தில் கைக்கு வந்த லேப்டாப்

x

ரயிலில் லேப்டாப்பை தவறவிட்ட மாணவி..4 மணிநேரத்தில் கைக்கு வந்த லேப்டாப்

வேலூர் விஐடி பல்கலைக்கழக மாணவி மதுஸ்மிதா, பெங்களூருவில் இருந்து காட்பாடிக்கு ரயிலில் வந்துள்ளார்.

அப்போது, 1.2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தமது லேப்டாப் மற்றும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை ரயிலிலேயே மறந்து வைத்துவிட்டு இறங்கிவிட்டார்.

ரயில் புறப்பட்ட நிலையில், இதுகுறித்து, மாணவி ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

உடனடியாக செயல்பட்ட ரயில்வே போலீசார், மாணவி பயணம் செய்த ரயிலின் டிக்கெட் பரிசோதகரை தொடர்பு கொண்டு, ஒரு மணிநேரத்தில் லேப்டாப்பை கண்டுபிடித்தனர்.

பின்னர், அந்த வழியாக வந்த ரயில் மூலம் அதனை காட்பாடிக்கு கொண்டு வரச் செய்து மாணவியிடம் ஒப்படைத்தனர்.

ரயில்வே போலீசாரின் இந்த துரித நடவடிக்கையை, பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்