கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

x

பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரி விடுதியிலே தூக்கிட்டு கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் பொள்ளாச்சி அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார். கல்லூரியில் தேர்வுகள் முடிந்து விடுமுறை என்பதால் பெருவாரியான மாணவர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், ஊருக்கு செல்லாமல் விடுதியிலே தங்கியிருந்த விஷ்ணு, அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, விஷ்னுவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் மாணவர்கள் கலைந்து சென்றனர். இதன்பின்னர் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்