"இதோட நிறுத்திக்கோ" டிடிஎப் வாசனுக்கு போலீஸ் எச்சரிக்கை..!

x

உதகை பகுதியில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கியதாக யூட்யூபர் டிடிஎப் வாசனை மடக்கிபிடித்த போலீசார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

கோவையை சேர்ந்த பிரபல யூட்யூபர் வாசன் மீது பல்வேறு வழக்குகளும், சர்ச்சைகளும் உள்ள நிலையில் அவர் நீலகிரி மாவட்டம் உதகைக்கு சென்றுள்ளார். அப்போது ஹில்பங்கு என்னும் பகுதியில் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை இயக்கிச் சென்ற அவரை போக்குவரத்து காவலர்கள் நிறுத்த முற்பட்டனர். ஆனால்

வாகனத்தை நிற்காமல் சென்ற அவரை போலீசார் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனத்தை இயக்கியதால் அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு இதுபோல் வேகமாக இரு சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது எனவும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் டிடிஎப் வாசன் தன் பாணியில் வீடியோவுக்கு போஸ் கொடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்