நட்சத்திரம் நகர்கிறது...பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம் - "வெறும் கண்களால் பார்க்கலாம்"

x

கடந்த 50,000 ஆண்டுகளில் நிகழாத அதிசயம் வானில் நிகழவுள்ளது.


புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட வால் நட்சத்திரம் பிப்ரவரியில் பூமியை கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வியாழன் கோளின் சுற்றுப்பாதையில் சூரியனை சுற்றி வரும் C/2022 E3 (ZTF) என்ற வால் நட்சத்திரமானது கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்விக்கி டிரான்சியன்ட் ஃபெசிலிட்டியில் உள்ள வைட் ஃபீல்ட் சர்வே கேமரா மூலம் வானியலாளர்கள் இதைக் கண்டறிந்தனர். அமெரிக்க விஞ்ஞானிகள் கூற்றுப்படி, உள் சூரிய குடும்பத்தின் வழியாக பயணித்து வரும் இந்த வால்நட்சத்திரம் வரும் வாரங்களில் பூமியை நெருங்கும். இது ஜனவரி 12 ஆம் தேதி சூரியனுக்கு மிக அருகில் இருக்கும். இதைத் தொடர்ந்து, வால் நட்சத்திரம் பிப்ரவரி 2 அன்று 42.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும். இந்த வால்நட்சத்திரத்தை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்