14 நிமிடத்தில் 47 செய்திகள்... தந்தி மாலை எக்ஸ்பிரஸ் | Speed News | Thanthi Short News (25.02.2023)

x
  • இந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கால்சுடன், பிரதமர் மோடி ஆலோசனை... இந்தியா- ஜெர்மனி இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் என ஓலாப் ஸ்கால்ஸ் நம்பிக்கை... உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளில், இந்தியாவும் பங்களிக்க தயாராக உள்ளதாக பிரதமர் மோடி உறுதி...


  • காங்கிரஸ் செயற்குழுவில் பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை... கட்சியின் அமைப்பு விதிகளில் திருத்தம்...


  • ஈரோடு கிழக்குத் தொகுதியில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்... திடீரென சாலையில் இறங்கி நடந்து சென்றவாறே மக்களிடம் வாக்கு சேகரித்தார்... பிரசாரத்தின் போது ஏராளமான பொதுமக்கள் முதல்வருடன் செல்ஃபி எடுத்து உற்சாகம்...


  • திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம்... எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு, முதல்வர் ஸ்டாலின் பதிலடி... இந்த ஆண்டுக்குள் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் காட்டுவேன் எனவும் உறுதி...

  • ராமநாதபுரம் அருகே, மோசடி பணம், ஆசிரியரின் வங்கி கணக்கு மூலம் சட்டவிரோத பரிமாற்றம்... தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவு... ஏற்கனவே,15 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் நடவடிக்கை...

Next Story

மேலும் செய்திகள்