எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கு...தொடர்புடைய அதிகாரிகள் பட்டியல் - சமர்ப்பிக்க தமிழக அரசு தயார்

x

எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கு...தொடர்புடைய அதிகாரிகள் பட்டியல் - சமர்ப்பிக்க தமிழக அரசு தயார்

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கையும், சொத்து குவிப்பு வழக்கையும் ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,

டெண்டர் முறைகேடு தொடர்பான புகார்கள் குறித்த விசாரணை நடந்து கொண்டிருந்த போது மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கை வெளியானது என்றார். அதில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

முதல் தகவல் அறிக்கை என்பது வழக்கின் ஆரம்ப கட்டம் என்றும் ஆரம்ப கட்டத்திலேயே வழக்கை ரத்து செய்யக் கோர முடியாது எனவும் தெளிவுபடுத்தினார். வழக்கில் மற்றொரு புகார்தாரரான அறப்போர் இயக்கம் தரப்பில் வாதங்களை முன் வைக்க ஏதுவாக விசாரணையை நவம்பர் 8 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்