தென்னிந்திய திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் சங்க வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

x

ஒவ்வொர ு சங்கங்களின் நிர்வாகிகளும், சுயநலன் கருதியே முடிவுகளை எடுக்கின்றனர் என்றும், உறுப்பினர்கள் நலனை கருத்தில் கொள்வதில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் விசாரித்தார்.

வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, சங்கத்தின் நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டுள்ளதால், உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஒவ்வொரு சங்க நிர்வாகிகளும், தங்கள் சொந்த நலன் கருதியே முடிவுகளை எடுப்பதாகவும் அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்தை நிர்வகிக்க, சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்