தாய்லாந்தில் இருந்து இறக்குமதியான போதை பொருள்... குருவிகளை வைத்து சிலோனுக்கு கடத்தியவர்கள் கைது...

x

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை ராயபுரம் பகுதியில் வெளிமாவட்டத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் போதை பொருட்களை விற்பனை செய்ய ஊருக்குள் ஊடுருவி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அந்த தகவலின் பேரில், வடசென்னையை சல்லடை போட்டு சலித்த போலீசார், சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காசிம் மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த குமரவேல் ஆகிய இருவரை மடக்கி பிடித்து சோதனை செய்திருக்கிறார்கள்.

அப்போது அவர்களிடம் அரை கிலோ எடைகொண்ட மெத்தபடமைன் என்ற உயர்ரக போதை பொருள் இருந்திருக்கிறது. உடனே இருவரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரனை நடத்தி இருக்கிறார்கள். அப்போது தான் இவர்கள் இருவரும் குருவிகள் என்றும், இவர்களின் ஆனி வேர் நாகையை சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகர் என்றும் தெரிந்திருக்கிறது. உடனே போலீசார் தனிப்படை அமைத்து, நாகைக்கு விரைந்திருக்கிறார்கள்.20 ஆண்டுகளாக அரசியல் போர்வையில் ஒலிந்திருந்த அந்த கடத்தல் மன்னனையும் அவரது மகனையும் கைது செய்து விசாரித்திருக்கிறார்கள்.அப்போது தான் இத்தனை ஆண்டுகளாக நடந்து வந்த ஒரு கடல்வழி போதைபொருள் கடத்தல் பற்றிய பகீர் தகவல் வெளிவந்திருக்கிறது.

ஆம்... கைது செய்யப்பட்டவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் கீவலூர் தாலுக்கா விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் மற்றும் அவரது மகன் அலெக்ஸ்.59 வயதான மகாலிங்கம் கடந்த 15 ஆண்டுகளாக விழுந்தமாவடி கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மகன் அலெக்ஸ் அப்பகுதியின் ஒன்றிய கவுன்சிலர் பொறுப்பில் இருக்கிறார். இருவருமே சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்.வெளியுலகை பொறுத்தவரை அப்பா மகன் இருவரும் மக்களின் குறை தீர்க்கும் நல்ல அரசியல்வாதிகள். ஆனால் உள்ளுக்குள் போதை பொருள் கடத்தல் மன்னர்கள்.

வெளிநாட்டில் இருந்து வட மாநிலங்களிலுக்கு வரவழைக்கப்படும் கஞ்சா எண்ணெய், கஞ்சா பொருட்கள், மெத்த பெட்டமைன், உள்ளிட்ட போதை பொருட்களை வாங்கி வந்து படகுகள் மற்றும் கப்பல்கள் மூலம் சிலோனுக்கு கடத்தி வந்திருக்கிறார்கள். கப்பல்களில் வரும் வெளிநாட்டவர்களுக்கு ஆட்களை வைத்து போதை பொருட்களை நேரடியாகவும் விற்பனை செய்துள்ளனர்கடந்த 20 ஆண்டுகளாக இந்த தொழிலை கனக்கச்சிதமாக செய்து வந்த இவர்கள், அவ்வப்போது போலீசில் சிக்கி கொள்வதும் உண்டு. இவர்களின் மீது சுங்க இலக்கா அதிகாரிகளின் வழக்குகள், போதை தடுப்பு பிரிவு போலீசாரின் வழக்குகள் என பல்வேறு வழக்குகள் கீழையூர், வேட்டைக்காரன் இருட்டு ஆகிய காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தான் இம்முறை காசிம் மற்றும் குமரவேலிடம் 70 லட்சத்தை கொடுத்து தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மெத்தபடமைனை டெல்லி சென்று வாங்கி வர சொல்லி இருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் இருவரும் சரக்கை வாங்கி வரும் வழியில் இப்படி போலீசில் கையும் களவுமாக சிக்கி கொண்டதால் 20 ஆண்டுகால கடத்தல் தொழில் அம்பலமாகி உள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக மகாலிங்கம், அலெக்ஸ் ஆகிய இருவரின் மீதும் NDPS தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்