ஆ.ராசா குறித்த அவதூறு பேச்சு - பாஜக நிர்வாகி மீது பாய்ந்த வன்கொடுமை தடுப்புச் சட்டம்

x

கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கூடுதல் வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். கடந்த 18ம் தேதி பீளமேட்டில் நடந்த இந்து முன்னணி கூட்டத்தில் பேசிய அவர், தந்தை பெரியார், ஆ.ராசா குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அவரது ஜாமின் மனு விசாரணைக்கு வந்த போது, வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவையும் சேர்ப்பதாக‌ ஆவணங்களை போலீசார் தாக்கல் செய்தனர். இது பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்