அக்கா மகளுக்கு வண்டி வண்டியாக சீர்வரிசை... ஊரையே திரும்பி பார்க்க வைத்த தாய்மாமன்கள்

x

திண்டுக்கல்லில் நடைப்பெற்ற பூப் புனித நீராட்டு விழாவில் தனது அக்கா மகளுக்கு,12 மாட்டு வண்டிகளில் சீர் கொண்டு வந்து தாய்மாமன்கள் அசத்தியுள்ளனர்..

திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்த ஜெயபால் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ரம்யாவிற்கு பூப் புனித நீராட்டு விழா அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், தாய்மாமன் பெருமாள் மற்றும் அவரது தம்பிகள், தனது அக்கா மகள் ரம்யாவிற்கு செய்ய வேண்டிய சீர்வரிசை பொருட்களை, 12 மாட்டு வண்டிகளில் வைத்து, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த நடைமுறைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக பாரம்பரிய முறைப்படி சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய தாய்மாமன்களை ஊரே வியந்து பார்த்தனர்...


Next Story

மேலும் செய்திகள்