கர்நாடக CM ஆனதும் சித்தராமையாவுக்கு வந்த தங்க ரதம் - எவ்ளோ கோடி தெரியுமா..?

x

கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் சித்தராமையாவுக்காக கர்நாடக அரசு சார்பில் புதிய சொகுசு கார் வாங்கப்பட்டுள்ளது.

டொயட்டோ வெல்பயர் என்னும் அந்த காரின் விலை, பெங்களூருவில் ரூ.96 லட்சம் ஆகும். வாகன பதிவெண், இதர உதிரிபாகங்கள் பொருத்துதல் உள்பட கட்டணம் கோடியே 19 லட்ச ரூபாய் ஆகும். இந்த காரில் ஸ்பிளிட் எல்.இ.டி. முகப்பு விளக்குகள் உள்ளன. பனிமூட்டமாக இருக்கும் சமயத்தில் ஒளிரும் பாக் விளக்கு வசதியும் இதில் உள்ளது. இது பெட்ரோலில் இயங்கும் ஹைபிரிட் மாடல் காராகும். 150 எச்.பி. திறன் கொண்ட 2.5 லிட்டர் என்ஜினை கொண்டது. இதில் டிரைவர் உள்பட 6 பேர் அமர்ந்து பயணிக்கலாம். ஒவ்வொரு இருக்கையும் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேவைப்படும் போது மேற்கூரையை விலக்கி கொள்ளும் வசதி உள்ளது. இந்த காரின் பக்கவாட்டில் சாத்தக்கூடிய ஸ்லைடிங் கதவுகள் உள்ளன. பின் இருக்கைகளில் 10. 2 அங்குல எல்.சி.டி. டி.விக்களும் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்