நாட்டை உலுக்கிய அதிர்ச்சி வீடியோ - மணிப்பூர் முதல்வருக்கு போன் போட்ட அமித்ஷா

x

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங்கிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார்.

மணிப்பூரில், குக்கி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை மெய்தே இனத்தைச் சேர்ந்த கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வண்புணர்வு செய்யும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் கடந்த மே மாதம் 4ம் தேதி அரங்கேறியுள்ளது. மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே கலவரங்களும், துப்பாக்கிச்சூடுகளும் தொடர்வதாக, இம்பால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேகசந்திரா சிங் தெரிவித்தார். இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளி ஹெரா தாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூர் முதல்வர் ​பிரேன் சிங்கிடம் பேசினார். குற்றவாளிகள் கைது குறித்தும், வீடியோ வெளியானதைத் தொடர்ந்து மணிப்பூரில் நிலவும் சூழல் குறித்தும் கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்