கோவையில் அடுத்தடுத்து நிகழும் அதிர்ச்சி சம்பவங்கள்..! வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

x

கோவையில் அடுத்தடுத்து நிகழும் அதிர்ச்சி சம்பவங்கள்..! வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி ஆதரவாளர்களின் குடோன்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரமடை சாலையில் இயங்கி வரும் இந்து முன்னணி ஆதரவாளர்களின் குடோனில், அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிகிறது.

இதில், பிளைவுட்டுகளில் தீப்பற்றிய நிலையில், உடனடியாக தீ அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்