போராட்டம் செய்யும்போது சுட்டு வீழ்த்தப்பட்ட சிவசேனா தலைவர்

x

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில், சிவசேனா தலைவர் சுதிர் சூரி என்பவர் மர்மநபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே சிவசேனா தலைவர் சுதிர் சூரி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த போலீசார் அவருடன் சமரச போச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சூரியை நோக்கி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பக்கியால் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த சூரி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை கூட்டத்தினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்