அரசு பெண் அதிகாரிகளுக்குப் பாலியல் தொல்லை...அமலாக்கத்துறையை ஏவி ரெய்டு விடுவதாக மிரட்டல்...?

x

சமூக வலைதளத்தில் வெளியான அந்தரங்க வீடியோக்கள்...?

சர்ச்சையில் சிக்கிய பாஜக மாநில துணைத் தலைவர்...

அரசு பெண் அதிகாரிகளுக்குப் பாலியல் தொல்லை...?

அமலாக்கத்துறையை ஏவி ரெய்டு விடுவதாக மிரட்டல்...?


மகாராஷ்ட்ரா பாஜக மாநில துணைத் தலைவர் க்ரிதி சோமையா மேல, அரசு பெண் அதிகாரிகள் பாலியல் குற்றச்சாட்டு முன்வைச்சு சர்ச்சைய கிளப்பியிருக்காங்க... ஹாட் வீடியோஸ் லீக் ஆனது எப்படி?

க்ரிதி சோமையா... வட இந்திய ஊடகங்களை அதிரவைத்து கொண்டு இருக்கும் பெயர் இது.

ஒன்றல்ல இரண்டல்ல இவரது 35 ஆபாச வீடியோக்கள் வெளியாகி மகாராஷ்ட்ராவை ஆட்டம் காண வைத்திருக்கிறது. அந்த 35 வீடியோக்களின் மொத்த நீளம் 8 மணி நேரமாம்.

மகாராஷ்ட்ராவை சேர்ந்த க்ரிதி சோமையா பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய புள்ளிகளில் ஒருவர். முன்னாள் எம்.பி. இந்நாள் பாஜக மாநில துணைத் தலைவர்.

திகைக்க வைக்கும் இந்த ஆபாச வீடியோவின் அதிர வைக்கும் தகவல் என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் அரசு பெண் அதிகாரிகள்..!

சோமையா பெண்களை தன்னுடைய பாலியல் வலையில் விழ வைக்க கையிலெடுத்த முக்கிய ஆயுதம் அமலாக்கத்துறை.

ஆம்... அமலாக்கத்துறையை ஏவி ரெய்டு நடத்திவிடுவதாக கூறி அவர் பல பெண்களை தன்னுடைய பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

சோமையா பல எம்பிக்கள், எம்.எல்.ஏக்களையும் இதே பாணியில் மிரட்டியுள்ளதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. யசோமதி தாக்கூர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மறுபக்கம் பாஜகவின் கூட்டணியில் இருக்கும் சிவசேனா கட்சியின், மகளிர் அணி சோமையாவை பாஜகவில் இருந்து நீக்க வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டிருக்கிறது.

மகாராஷ்ட்ர அரசியலில் புயலை கிளப்பியுள்ள ஆபாச வீடியோ குறித்து சட்டசபையிலும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதற்கு பதிலளித்த மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், அந்த வீடியோக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த விவகாரத்தில் யாரையும் பாதுகாக்கப்போவது கிடையாது என்றும் அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணுடைய அடையாளத்தை போலீசார் விசாரித்து கண்டுபிடிப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

மகராஷ்ட்ராவையே அதிர வைத்திருக்கும் இந்த விவகாரம் தொடர்பாக சோமையா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில், "ஒரு மராத்தி டிவி சேனல் என்னுடைய வீடியோக்களை வெளியிட்டு உள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்தப்பட்டு உள்ளன. நான் பெண்களிடம் தவறாக நடப்பவன் இல்லை, அந்த வீடியோக்களை சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டிருக்கிறார்.

போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பிறகே அந்த வீடியோவில் இருப்பது க்ரிதி சோமையாதானா..? அவரால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் போன்ற முழு தகவலும் தெரியவரும்.


Next Story

மேலும் செய்திகள்