"நான் இன்னும் ஓய்வு பெறவில்லை" - டென்னிஸ் வீராங்கனை செரீனா

x

தான் இன்னும் ஓய்வு பெறவில்லை என அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கூறி உள்ளார்.

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் தொடங்குவதற்கு முன்பாக டென்னிஸை விட்டு விலக இருப்பதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்து இருந்தார்.

கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்க ஓபன் 3ம் சுற்றில், செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்து வெளியேறினார்.

இந்தப் போட்டியுடன் செரீனா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றதாகக் கருதி, டென்னிஸ் உலகம் அவருக்கு பிரியாவிடை அளித்தது. இந்நிலையில், தான் இன்னும் ஓய்வு பெறவில்லை என செரீனா வில்லியம்ஸ் தெரிவித்து உள்ளார்.

சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய செரீனா, மீண்டும் தான் டென்னிஸ் ஆடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், ஓய்வு குறித்து இன்னும் யோசிக்கவில்லை என்றும் கூறினார்.

செரீனாவின் அறிவிப்பு, அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்