பள்ளி வாகனத்தில் இருந்து.. திடீரென தவறி விழுந்த 4 ஆம் வகுப்பு சிறுமி - அதிர்ச்சி சம்பவம்

x

பள்ளி வாகனத்தில் இருந்து.. திடீரென தவறி விழுந்த 4 ஆம் வகுப்பு சிறுமி - அதிர்ச்சி சம்பவம்

கன்னியாகுமரி அருகே பள்ளி வாகனத்தின் அவசர ஜன்னல் வழியாக கீழே விழுந்த, பள்ளி சிறுமி படுகாயம் அடைந்தார்.

பல்லம்விளை பகுதியை சேர்ந்த சிறுமி கென்சாரோஸ். மார்த்தாண்டம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வரும் கென்சாரோஸ், வழக்கம்போல் பள்ளி வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, சக மாணவிகளுடன் விளையாடி கொண்டிருந்த சிறுமி, அவசர ஜன்னலை திறந்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், சிறுமி படுகாயம் அடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், விபத்து குறித்து வழக்குபதிந்த போலீசார், பள்ளி வாகனத்தின் ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்