மது போதையில் பள்ளிசீருடையுடன் மயங்கி கிடந்த பள்ளி மாணவிகள்..!! கரூரில் அதிர்ச்சி சம்பவம்

x

மது போதையில் பள்ளிசீருடையுடன் மயங்கி கிடந்த பள்ளி மாணவிகள்..!! கரூரில் அதிர்ச்சி சம்பவம்


கரூரில் மதுபோதையில் மயங்கி கிடந்த பள்ளி மாணவிகளை மீட்ட போலீசார், அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். கரூரில் உள்ள அரசுப்பள்ளியில் ப்ளஸ் ஒன்னில் தோல்வியடைந்த மாணவிகள் 3 பேர், சிறப்பு தேர்வு எழுதிவிட்டு வந்தனர். அப்போது ஒரு மாணவியின் ஆண் நண்பர் ஒயின் வாங்கித் தந்ததாக கூறப்படுகிறது. இதனை குடித்த மாணவிகள் 3 பேரும் சாலையின் ஓரம் மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் மாணவிகள் 3 பேரையும் மீட்டு அறிவுரை கூறியதோடு பெற்றோரை வரவைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர்..


Next Story

மேலும் செய்திகள்