பந்தை சுத்தி சுத்தி பறக்கவிட்ட பள்ளி மாணவி.. மிரண்டுபோன சச்சின் - தீயாய் பரவும் வீடியோ

x

ராஜஸ்தானைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், சிறப்பாக கிரிக்கெட் ஆடுவதை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார். பந்தை எல்லா திசைகளிலும் சுழன்றடிக்கும் அந்த மாணவியின் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சச்சின், மாணவியின் பேட்டிங்கைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் எனக் குறிப்பிட்டு உள்ளார். பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவும் மாணவியைப் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்