சாலை மறித்து பள்ளி மாணவர்கள் போராட்டம், துணைக்கு இறங்கிய பொது மக்கள்.. மாணவர்கள் வைத்த கோரிக்கை?

x

சாலை மறித்து பள்ளி மாணவர்கள் போராட்டம், துணைக்கு இறங்கிய பொது மக்கள்.. மாணவர்கள் வைத்த முக்கிய கோரிக்கை?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரத்தில் மேம்பாலம் அமைக்க கோரி, பள்ளி மாணவர்கள் நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அப்பகுதி மக்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் போது, அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுவதாகவும், பல முறை மனு அளித்தும் மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். விபத்து ஏற்படுவதைத் தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என மாணவர்களும் பொதுமக்களும் முழக்கங்களை எழுப்பினர். இந்த மறியலால் 2 கிலி மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்