"குடும்பங்கள் கொண்டாடும் திரில்லர் படம்" மகிழ்ச்சியில் பேசிய சரத்குமார்

x

போர் தொழில் படத்தின் வெற்றி விழா துபாயில் கொண்டாடப்பட்டது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில், துபாயில் தனியார் அமைப்பு ஏற்பாடு செய்த வெற்றி விழா நிகழ்ச்சியில் படக்குழுவினருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டனர். பின்னர் மேடையில் பேசிய சரத்குமார், ஒரு கிரைம் திரில்லர் படத்தை குடும்பங்கள் கொண்டாடி வருவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்