மீண்டும் தொடங்கும் சுந்தர் சியின் 'சங்கமித்ரா'..?

x

சுந்தர் சியின் சங்கமித்ரா படத்தை உருவாக்கும் முயற்சி மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம்ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் சங்கமித்ரா படம் உருவாக உள்ளதாக கடந்த 2016ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் பல்வேறு காரணங்களால் படம் தொடங்கப்படாமல் உள்ள நிலையில், இந்த படத்தை தயாரிக்க லைகா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்