சேலத்தில் திமுக கவுன்சிலர் மற்றும் தலைமைச்செயற்குழு உறுப்பினரும் அதிரடி சஸ்பெண்ட்

x

மாவட்ட செயலாளர் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட கவுன்சிலர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாநகராட்சி 18வது வார்டு கவுன்சிலரான சர்க்கரை சரவணன், கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் தொடர்பான புகார் கடிதத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதனிடையே சர்க்கரை சரவணன் பொதுமக்களை மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ வைரலானது. இந்த நிலையில், கட்சி விதிகளை மீறி செயல்பட்டதாக, சர்க்கரை சரவணன் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதேபோல், சேலம் திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினர் பதவி வகித்த ஜெயக்குமாரும் தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்