மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் மகுடம் சூடினார் சபலென்கா..இறுதிப்போட்டியில் இஹாவை வென்று அபாரம்...!

x

மேட்ரிட் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள போலந்து வீராங்கனை இஹா ஸ்வியாடெக் உடன், தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள சபலென்கா மோதினார். இதில் முதல் செட்டை 6க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் சபலென்கா கைப்பற்ற, 2வது செட்டை அதே புள்ளிகள் கணக்கில் இஹா வென்றார். இருவரும் தலா 1 செட்டைக் கைப்பற்றியதால் ஆட்டம் விறுவிறுப்பானது. தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி செட்டில் அதிரடியாக ஆடிய சபலென்கா, 6க்கு 3 என்ற கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்