ரூ.1.40 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் - மத்திய அரசு

மே மாதத்தில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 885 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
x

சிஜிஎஸ்டி எனப்படும் மத்திய ஜி.எஸ்.டியாக 25 ஆயிரத்து 36 கோடி ரூபாயும், எஸ்ஜிஎஸ்டி எனப்படும் மாநில ஜி.எஸ்.டியாக 32 ஆயிரத்து ஒரு கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியான ஐ.ஜி.எஸ்.டி 73 ஆயிரத்து 345 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளித்த பின்னர், மே மாதத்தில் மத்திய அரசின் மொத்த வரி வருவாய் 52 ஆயிரத்து 960 கோடி ரூபாயாகவும், மாநில அரசுகளின் வரி வருவாய் 55 ஆயிரத்து 124 கோடி ரூபாயாகவும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.நடப்பாண்டு மே மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டு மே மாதம் வசூலான ஜிஎஸ்டி வசூலை காட்டிலும் 44 சதவீதம் அதிகம் என்றும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 97 ஆயிரத்து 821 கோடி ரூபாயாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜிஎஸ்டி அமல்படுத்தப் பட்டதில் இருந்து நான்காவது முறையாக ஜிஎஸ்டி வசூல் மே மாதத்தில் 1.40 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளதாகவும், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஜிஎஸ்டி வசூல் 1.40 லட்சம் கோடி ரூபாயாக இருப்பதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.இவற்றில் தமிழகத்திலிருந்து மொத்த ஜிஎஸ்டி வசூல் 7 ஆயிரத்து 910 கோடி ரூபாயாக உள்ளதாகவும், இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை காட்டிலும் தமிழகத்தில் 41 சதவீதம் ஜிஎஸ்டி வசூல் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்